நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதை போல் தெரிகிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செப்., 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட சாயலில் வேறொரு கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் வர வேண்டும். விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன். விசிக மது ஒழிப்பு மாநாடு தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றார்.