வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிப்பு

64பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திண்டிவனம் அடுத்துள்ள, ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கந்தாடு காணி மேடு இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தொடர்புடைய செய்தி