வேடசந்தூர் அருகே உள்ள வெரியம்பட்டியைச் சேர்ந்தவர் ராமாயி வயது 48 100 நாள் வேலைக்கு செல்வதும் மாடு வளர்ப்பதும் வேலையாக செய்து வருகிறார். இவரது கணவர் ஜெய்சங்கர் வயது 52 நூற்பாலை விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராமாயியின் மாமனார் 75 வயது பெருமாள் ராமாயிஇடம் தவறான வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டு கட்டையால் தன்னை தாக்கியதாக தலையில் காயத்துடன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.