வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருசக்கர வாகனத்தில் தனது மகளையும் மகனையும் ஏற்றிக்கொண்டு விருதலைபட்டியை சேர்ந்த லாவண்யா சென்று கொண்டிருந்தார். அந்த இருசக்கர வாகனத்தின் மீது பாலப்பட்டி ஊராட்சி விராலிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் லாவண்யா மற்றும் பாலமுருகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். குழந்தைகள் இருவரும் காயம் இன்றி தப்பினர். தகவல் அறிந்த வேடசந்தூர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர்.