வேடசந்தூர்: தரிசு காட்டுக்குள் பற்றி எறிந்த காட்டுத்தீ

54பார்த்தது
வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டி பகுதியில் குட்டம் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமசாமி என்பவரின் 10 ஏக்கர் கம்பி வேலி போட்ட தரிசு காட்டுக்குள் தீ பற்றி கொழுந்து விட்டு எறிந்தது. தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் நடந்து சென்று இலை தலைகள் மூலம் காட்டுத்தீயை அவிக்க மாலை ஐந்து முப்பது மணி முதல் இரவு 7: 30 மணி வரை இரண்டு மணி நேரமாக போராடினர். தரிசு நிலத்தில் புட்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி