வேடசந்தூர் ஆத்து மேட்டில் கவிதா முருகன் ஒர்க் ஷாப் முன்பாக திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதனை அடுத்து ஒரு காரில் சைரன் ஒழிக்க தொடங்கியது. இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் கேரளா பதிவெண் கொண்ட ஒரு காரில் இருந்த ஏர்பேக் திடீரென வெடித்ததால் சத்தம் கேட்டதாகவும் அந்த அதிர்வின் காரணமாக காரின் சைரன் ஒலித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அதன் பிறகு அனைவரும் நிம்மதி அடைந்து கலைந்து சென்றனர். வெடிசத்தம் காரணமாக ஆத்து மேட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.