வேடசந்தூர் ஆத்து மேடு நான்கு ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்லும் இடமாக உள்ளது. இங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு வாகனங்கள் முறையாக சென்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லாரி மோதியதில் போக்குவரத்து சிக்னல் கம்பம் உடைந்து கீழே விழுந்தது. அதன் பிறகு மீண்டும் அதனை சரி செய்யாமல் விட்டு விட்டதால் தற்பொழுது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி சேதம் அடைகின்றது. வாகன விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. இதனால் வேடசந்தூர் காவல்துறையினர் உடனடியாக போக்குவரத்து சிக்னலை சீர் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டரிடம் கேட்ட பொழுது உடைந்த விழுந்த சிக்னல் கம்பத்தை சரி செய்ய வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் யாராவது முன்வந்து அதற்கான செலவு தொகையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.