வேடசந்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் வயது 50 ஐஸ் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 7 சென்ட் இடத்தில் கம்பி வேலி அமைத்து உள்ளே தக்காளி வாழை உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கந்தன் ஆசாரி தெருவை சேர்ந்த அன்சாரி என்பவர் கம்பிவேலியை பிரித்து உள்ளே சென்று தக்காளி மற்றும் உள்ளே இருந்த செடிகள் அனைத்தையும் பிடுங்கிப் போட்டு வாழை மரத்தையும் வேரோடு சாய்த்து விட்டு அங்கேயே படுத்து உறங்கி விட்டார். அப்பொழுது அருகில் வந்த நாயையும் குச்சியால் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.