வேடசந்தூர்: குடிபோதையில் மண்டையை உடைத்த நபர் கைது

65பார்த்தது
நாகையா கோட்டையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் வயது 33 நூற்பாலை தொழிலாளி. இவரும் கன்னிவாடி அருகே உள்ள தெற்குப்பட்டியைச் சேர்ந்த மாதவன் வயது 40 என்பவரும் வேடசந்தூர் ஆத்து மேட்டில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு ஆத்துமேடு கிங்ஸ் பேக்கரி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது முத்துக்கிருஷ்ணன் பாக்கெட்டில் இருந்த பணத்தை மாதவன் எடுக்க முயற்சி செய்ததாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கீழே கிடந்த செங்கல்லை எடுத்த மாதவன் முத்துகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மாதவனை கைது செய்து வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி