திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பண்ணை பட்டியைச் சேர்ந்தவர் பண்ணை கார்த்திகேயன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு லட்சம் மதிப்புள்ள புதிய புல்லட் வாங்கியுள்ளார். வாகனம் வாங்கியதில் இருந்து அதனை எந்த பராமரிப்பும் செய்யாமல் ஓட்டி வந்தார். இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற்ற பொழுது அங்கு திமுகவிற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்திற்கு சென்ற பண்ணை கார்த்திகேயனின் புல்லட் காணாமல் போனது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் ராயனூரை சேர்ந்த ஹரிஹரன் வயது 23, பிரசாந்த் வயது 19 ஆகிய இரண்டு பேரை பிடித்து அவர்களிடமிருந்து 9 புல்லட்டுகளை பறிமுதல் செய்தனர். கேக் வெட்டி காணாமல் போன புல்லட் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.