தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த ஏழு நாட்களாக பழனி அப்பர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நிலா சோறு வைத்து கும்மியடித்து வழிபாடு செய்து வந்தனர்.
தைப்பூசம் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கும்மி அடித்து முருகனை வழிபாடு செய்தனர். இதனால் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையாகும்.