திண்டுக்கல் மாவட்டம், பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பக்தி பரவசத்துடன் பழனிக்கு வருகை தந்தும். இதுபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று சிகர நிகழ்ச்சியான தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையிலே மலை அடிவாரப்பகுதியில் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது.