திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. திருஆவினன்குடி கோயிலில் தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று கூட்டம் அதிகமாகவே இருப்பதால் கோயில் நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்துள்ளது.