திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோயில் எதிரே உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி சார்பில் இப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கோயில் இடத்தில் நகராட்சியினர் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என பிஜேபி நிர்வாகிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.