பழனி - Palani

பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போனது குறித்து பாஜக தலைவர் கேள்வி

பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போனது குறித்து பாஜக தலைவர் கேள்வி

பழனி பஞ்சாமிர்தம் கேட்டு போனதற்கு அரங்கம் குழு தலைவர் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தவர் ராஜசேகரன். இவருக்கு சொந்தமான ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனத்திடம் இருந்து நெய் தற்சமயம் வாங்கவில்லை என கூறுகின்றனர். அப்படியானால் கடந்த 2023 நவம்பர் , டிசம்பர் 2024 ஜனவரி , பிப்ரவரி மாதங்களில் எந்த நிறுவனத்திடம் நெய் கொள்முதல் செய்யப்பட்டது. அந்தக் காலகட்டங்களில் பஞ்சாமிர்தம் கெட்டுப் போனது எந்த நெய்யை பயன்படுத்தியதனால் என்கின்ற விவரங்களை உடனடியாக தேவஸ்தான நிர்வாகம் வெளியிட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருளும் எந்தெந்த நிறுவனத்திடம் வாங்கப்படுகிறது என்கின்ற வெள்ளை அறிக்கைகளை வெளியிட வேண்டும். இது குறித்து பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர். நிர்வாகம் பதில் கூறாவிட்டால் நாங்கள் போராட்டங்கள் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా