திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலப்பட்டி, தொப்பம்பட்டி, கீரனூர், மானூர், உள்ளிட்ட ஊராட்சிகளில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடங்கள் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் 'ஒவ்வொருவருக்கும் கட்ட வேண்டும் என்பது கனவாகும் அந்த கனவை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் அவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு 3. 53 லட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படுவதாகவும், அதுமட்டுமின்றி சுய உதவிக் குழு மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்க கடனாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் செங்கல், ஜல்லி, மணல், உள்ளிட்டவை உற்பத்தி விலைக்கே பயனாளிகளுக்கு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கினார்.