இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

84பார்த்தது
இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட்டில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "சென்னை செஸ் ஒலிம்பியாட் முதல் 45வது புடாபெஸ்ட் செஸ் ஒலிம்பியாட் வரை தொடர்கிறது இந்திய அணியின் வெற்றிப் பயணம். நமது இந்திய வீரர்களின் இடைவிடாத உழைப்பு, எல்லைகளை தாண்டி உலக அரங்கில் தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்தியா தொடர்ந்து கோலோச்சி பிரகாசிப்பதை பார்க்க மனதுக்கு இதமாக உள்ளது. இந்த வரலாற்று சாதனைக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி