பழனி சுற்றுபுற கிராமங்களில் இரவில் கனமழை

71பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலை முதல் வெயில் வாட்டிய வதைத்து வந்த நிலையில், நேற்று(ஆக.29) இரவு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாப்பம்பட்டி அகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுபுற சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழையால் இதமான சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி