
திண்டுக்கல்: சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்
இடும்பன்கோவில் அருகே பைபாஸ் சாலை பகுதி தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறிவருகிறது. குறிப்பாக கட்டடம், ஓட்டல், இறைச்சி கழிவுகள் அதிகமாக கொட்டி தீ வைக்கப்பட்டுவருகிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மருத்துவ கழிவு குப்பைகள் தீவைத்து எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.