பழனி முருகன் மலை கோயிலில் மூன்றாம் மின் நிலுவை ரயிலில் புதிய இரும்பு வட கயிறு பொருத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக மூன்று மின் இழுவை ரயில்கள் உள்ளன. இதில் மூன்றாவது மின் இழுவை ரயிலில் இரும்பு வட கயிறு தேய்மானம் அடைந்திருந்தது. இதனால் புதிதாக ரூபாய் 5 லட்சம் செலவில் 450 மீட்டர் நீளமுள்ள இரும்பு வடக்கயிறு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்பு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், சிறப்பு பூஜைக்குப் பின்பு மூன்றாவது மின்னிழுவை ரயில் செயல்பட தொடங்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.