பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழனியில் நேற்று(செப்.19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, பயிர் கணக்கெடுப்புப் பணிகளுக்கு மதிப்பூதிய வழங்கக் கோரி முழக்கமிடப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்