திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 53 ஆண்டுகளாக கஞ்சிக்கலைய ஊர்வலம் நடைபெற்றது. கஞ்சிக்கலையம் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாலை அணிந்து காப்பு கட்டிக்கொண்டு சிவப்பு நிற ஆடை அணிந்தும் கஞ்சிக்கலயங்களுடன் ஊர்வலம் சென்றனர்.
உலக நலன் வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழித்து வளம் பெற வேண்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும் கஞ்சிக்கலைங்களுடன் முளைப்பாரிகளுடன் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி பாடல்களை ஒலித்துக்கொண்டே முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சுப்பிரமணியன் மற்றும் செல்வகுமார் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.