பழனி பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் திறப்பு
பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான் முதலில் நினைவிற்கு வரும். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் பஞ்சாமிர்தத்தை வாங்குவார்கள். இந்நிலையில் பழனி தேவஸ்தானம் நிர்வாகம் சார்பாக பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் இன்று(நவம்பர் 17) திறக்கப்பட்டது.