தர்மபுரி: அரிசி கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது
பாப்பிரெட்டிபட்டி |

தர்மபுரி: அரிசி கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உள்ள பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி இவர் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் (குட்கா) பதுக்கி விற்பனை செய்வதாக, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை பாப்பிரெட்டிப்பட்டி காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, அரிசிக் கடையில் சோதனை நடத்தினர். அங்கு புகையிலைப் பொருட்கள் (குட்கா) ஒரு கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. அதனைப் பறிமுதல் செய்த பாப்பிரெட்டிப்பட்டி காவலர்கள், வழக்குப்பதிவு செய்து பழனியைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு