தர்மபுரி: கிணறு தோண்டும் போது விபத்து ஒருவர் உயிரிழப்பு

57பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பணக்காரன் இவருக்கு வயது 54 கூலி தொழிலாளி. இவர் கலப்பம்பாடி அருகே உள்ள நரசிபுரம் கிராமத்தில் கிணறு தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது கிணற்றில் இருந்து மண், கற்களை கிரேன் எந்திரம் மூலம் மேலே அனுப்பும் பணியில் பணக்காரன் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது கிரேன் இரும்பு கயிறு திடீரென அறுந்து மண் கூடை கிணற்றில் இருந்த பணக்காரன் தலை மீது நேராக விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து பெரும்பாலை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி