தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
தீபாவளியன்று மாலை நேரத்தில் லட்சுமி பூஜை செய்வதன் மூலம் லட்சுமி குறையாத செல்வத்தையும், ஆசியையும் வழங்குவார் என்பது மக்களின் நம்பிக்கை. அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், மாலை 6:27 மணி முதல் இரவு 8:32 வரை லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். வீட்டில் மகாலட்சுமி படம் மற்றும் கலசம் அலங்கரித்து, தேவிக்கு பிடித்த இனிப்புகளை படையலிட்டு பூஜை செய்தால் லட்சுமி தேவி வீட்டில் வாசம் செய்வாள்.