பாலக்கோடு |

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இஆப. , அவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு இன்று (23. 04. 2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்திட அரும்பாடுபட்ட தமிழறிஞர் கள். தமிழகத்தை உயர்த்திட தம் ஆயுளையே அர்ப்பணித் தார்கள். நாட்டின் விடுதலை க்கு பாடுபட்டு தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளை பெருமைப் படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு. அவற்றில் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி தினமான இன்றைய தினம் வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இஆப. , கலந்துக்கொண்டு வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வீடியோஸ்


தமிழ் நாடு
Apr 19, 2024, 05:04 IST/

அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு

Apr 19, 2024, 05:04 IST
ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றும் தன்மை கொண்டது. வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாமல் சிறந்த அரசு நிர்வாகத்தை மட்டும் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக முடியும். பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு செலுத்திய பிறகு உங்கள் விரலில் மை அடையாளத்துடன் செல்ஃபி எடுத்து, லோக்கல் ஆப்பில் பகிரவும். அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு வழங்கப்படும். புகைப்படத்தை பதிவிட முதலில் உங்கள் மொபைலில் உள்ள லோக்கல் ஆப்பை க்ளிக் செய்யவும். பின்னர் முகப்புத் திரையில் உள்ள '+' பொத்தானைத் தட்டவும். பிறகு 'வாக்குப்பதிவு செல்ஃபி போட்டி' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது + பட்டனை அழுத்தி உங்கள் செல்ஃபி போட்டோவை சேர்க்கவும். தலைப்பில் "#My Vote My Right" என்று பதிவிடவும். அதன் பிறகு, உங்கள் விவரங்களை உள்ளிட்டு, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.