
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் காவலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தங்க சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதோடு 24 மணி நேரமும் ஆண், பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.