தர்மபுரி: மாவட்டத்தில் 90, 000 பேருக்கு காசநோய் பரிசோதனை

53பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் மருத்துவர் பாலசுப்ரமணியம் அவர்கள் தெரிவித்ததாவது தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு காசநோய் கண்டறியப்பட்ட 1286 நபர்களில் 1565 நபர்கள் முறையான சிகிச்சைகளால் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும் 2024 ஆம் ஆண்டு காச நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட 1550 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் கடந்த மூன்று மாதங்களில் தர்மபுரி மாவட்டத்தில் காசநோய் பாதிப்பு குறித்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் இதில் 90, 000 நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு சத்தான உணவுகளை சாப்பிட அரசு மூலம் மாதம் ஆயிரம் வீதம் ஆறு மாதங்களுக்கு தல 6000 ரூபாய் வழங்கப்பட்ட வருவதாகவும் ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படுகிறது மேலும் 6 மாதங்கள் தொடர் சிகிச்சையின் மூலம் முழுமையாக இவர்களை குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி