அரூர் |

பம்பு செட் மின்மோட்டார் திருட்டு

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ளது கெலவள்ளி ஊராட்சி கோட்டைக்காடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் 50. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். கண்ணன் தனது விவசாய நிலத்திற்கு கே. ஈச்சம்பாடி அணையிலிருந்து அரசு அனுமதி பெற்று பம்பு செட்டு மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு கெலவள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் 32 மற்றும் சிவா 35 ஆகிய 2 பேரும் சேர்ந்து கண்ணனின் விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட் மின்மோட்டார் மற்றும் பைப்லைன்களை வெட்டி மூட்டையாக கட்டி திருடி தூக்கிச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த கண்ணன் இதனைக் கண்டு திருடர்கள், திருடர்கள் என்று சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த திருடர்கள் 2 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சுதாரித்து கொண்ட திருடர்கள் பம்பு செட் மற்றும் மின்மோட்டார் பைப்லைன்ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கண்ணன் கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகார் மேல் போலீஸ் - இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 திருடர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

வீடியோஸ்