சத்தீஸ்கர்: ராய்ப்பூரில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆராங் நோக்கி தேசிய நெடுஞ்சாலை எண் 53-ல் வந்து கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.