Ducati இந்தியா நிறுவனம் தனது 2025 Panigale V4 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.29.99 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025 Panigale V4 பைக்கின் 1,103 சிசி என்ஜின் 216hp பவருடன் 121Nm டார்க் சக்தியையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. Ducati வாடிக்கையாளர்கள் இடையே அதிகளவு எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த பைக் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.