பிரேசில்: கார்னிவல் நிகழ்ச்சி ஒன்றில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட திருடனை, போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல டிவி நிகழ்ச்சியான பவர் ரேஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் வேடத்தில் சென்ற போலீசார், அந்த திருடனை கைது செய்துள்ளனர். மக்கள் அனைவரும் பல வேடங்களில் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், மாறு வேடத்தில் இருப்பதற்காக போலீசார் பவர் ரேஞ்சர்ஸ் வேடமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட திருடனிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.