தருமபுரி மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் கீழ் கடந்த 13 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய தொழிலாளர்கள் இன்று மார்ச் 06 காலை தர்மபுரி மின் கோட்டம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு மின்சார ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட செயலாளர் நஞ்சப்பன்தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என்றும் ஊதியத்தை தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மின்சார ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.