இசைஞானி இளையராஜா லண்டனில் தனது சிம்பொனி இசையை வெளியிடுவதற்காக இன்று காலை லண்டன் புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘இசையமைப்பாளர் தேவா, தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தலாம்’ என கூறியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இப்போ இந்த கேள்வி தேவையா? அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க. நல்ல விஷயத்திற்காக போகிறேன்” என இளையராஜா ஆவேசமாக பதிலளித்தார்.