தமிழகத்தில் நேற்று (மார்ச் 5) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதன்படி, அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கன்னியாகுமரி - 101.84, சேலம் - 100.58, பரமத்திவேலூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில், இன்று (மார்ச 6) முதல் வரும் மார்ச் 10ஆம் தேதி வரை இயல்பைவிட 2-3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.