சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து வாங்குவதற்காக கையெழுத்து இயக்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கினார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசாரிடம் தமிழிசை சௌந்தரராஜன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த பகுதிகளில் தான் 40 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், நான் என்ன தீவிரவாதியா? நான் என்ன தவறு செய்து விட்டேன்? எதற்கு என்னை சுற்றி வளைக்கிறீர்கள்? என்று அவர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.