உ.பி், புலந்த்சாஹர் மாவட்டம் பிசா காலனியில் வசிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்ஷ் என்னும் பெயர் கொண்ட அந்த சிறுவனுக்கு, அவர் அணியும் உடைகளுக்கு ஏற்ப அவரது கண்களின் கருவிழியின் நிறம் மாறுகிறது. அவரது கண்களின் நிறம் எப்படி திடீரென மாறுகிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. அந்த சிறுவனை காண்பதற்காக பலரும் பிசா காலனிக்கு படையெடுத்து வருகின்றனர்.