10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. அதிர்ச்சி கடிதம்

59பார்த்தது
10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. அதிர்ச்சி கடிதம்
சேலம் ஆத்தூர் சார்வாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். குழந்தைகள் தாய் பானுமதியிடம் வளர்ந்து வரும் நிலையில் இவரது மூத்த மகள் தாரணிஸ்ரீ அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சிறுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை சக தோழிகள் கேலி கிண்டல் செய்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைக்கப்பட்டு எனது இறப்பிற்கு காரணம் சக தோழிகள்தான் காரணம் என உருக்கமான கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்தி