ரமலான் நோன்பு கடைபிடிக்காமல் இந்திய வீரர் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர், "ஷமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆரோக்கியமாக இருக்கும் நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்காமல் பாவம் செய்துவிட்டார். அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.