ஒடிசாவில் அரசுப் பள்ளி கட்டடங்களை காவி நிறத்தில் மாற்ற முடிவு

85பார்த்தது
ஒடிசாவில் அரசுப் பள்ளி கட்டடங்களை காவி நிறத்தில் மாற்ற முடிவு
ஒடிசாவில் அனைத்து அரசுப் பள்ளி கட்டடங்களிலும் தற்போது பச்சை நிறத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த நிறத்தை நீக்கிவிட்டு, காவி நிறத்திற்கு மாற்ற அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான உதாரண படத்துடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றையும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளின் நிறத்தை, வெள்ளை மற்றும் பச்சை நிறத்திலிருந்து வெளிர் பழுப்பு (Brown) மற்றும் கருஞ்சிவப்பு (Maroon) நிறத்திற்கு மாற்றியது.

தொடர்புடைய செய்தி