தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (மார்ச் 6) காலை திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றார். அங்குள்ள பழவனக்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருடன் கலந்துரையாடினார். அப்போது, அங்கு வருகை தந்திருந்த பழவனக்குடி பொதுமக்களில் ஐந்து பேர் வீடு மற்றும் பட்டா வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை விடுத்த 6 மணி நேரத்துக்குள் அவர்களுக்கு நிதி மற்றும் பட்டா ஆகியவற்றை துணை முதலமைச்சர் வழங்கினார்.