உ.பி: புலந்த்ஷரில் ஓரினச்சேர்க்கை உறவால் திருமணம் நின்றுப்போன சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்த போது, மணமேடையை நோக்கி வேகமாக வந்த பெண் மணப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னுடன் 4 வருடமாக வாழ்ந்துவிட்டு இப்படி பண்றியே என்று மணப்பெண்ணை அடித்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அடித்து துரத்தினர். இந்நிலையில், ஓரினச்சேர்க்கை உறவை காரணம் காட்டி மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.