பொளந்துகட்டும் வெயில்.. தர்பூசணி சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்

58பார்த்தது
பொளந்துகட்டும் வெயில்.. தர்பூசணி சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், வாழை, காய்கறிகள் உள்ளிட்டவைகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை சீசனில் மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் தர்பூசணி சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையும், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அதிகளவு தர்பூசணியை விவசாயிகள் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதால், வெயில் காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி