தமிழ்நாட்டில் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 03ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது தந்தை இறந்த நிலையிலும் இன்று 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்வை முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவரை, அவரது தங்கை கண்ணீருடன் வரவேற்றார். தொடர்ந்து, தனது தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.