குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர கடுமையான சொற்களை பிரயோகித்து அவர்களை வசைபாடக்கூடாது. உன் பிரச்சனையை கேட்க எனக்கு நேரமில்லை, நீ புத்திசாலி இல்லை, எந்த விஷயத்திற்கும் லாயக்கு இல்லை, நீ எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய், அவன் சிறப்பாக படிக்கிறான்.. நீ அவனுக்கு நிகர் கிடையாது போன்ற எதிர்மறை வார்த்தைகளை பிள்ளைகளிடம் பேச வேண்டாம்.