திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தனியார் பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான வாகனத்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநர் முத்து அண்மையில் விபத்தை ஏற்படுத்தினார். ஆனால், பைக் குறுக்கே வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறி முத்து நாடகம் ஆடிய நிலையில் போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் உண்மை வெளிவந்தது. இதையடுத்து முத்து நேற்று (நவ. 11) கைது செய்யப்பட்டார். குறித்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.