குறிஞ்சிப்பாடி: சாலையோரம் மணலை அகற்றும் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையோரம் அதிக அளவில் மணல்கள் குவிந்து காணப்பட்டது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர் மூலம் சாலையோரம் உள்ள மணல்களை நவீன இயந்திரம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் குறிஞ்சிப்பாடி பகுதியில் சாலையில் சாலையோரம் மணல்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.