கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் இடம் அருகே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை இன்று ஜெசிபி இயந்திரம் மூலம் தற்காலிகமாக சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.