மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோவில் இன்று திறப்பு
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் இன்று ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.